நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும் இரண்டு நண்பர்களிடையே நடக்கும் ஆங்கில உரையாடல்
Watch the below video to listen to the conversation:
Here is the English Dialogue for reading:
Mohan:
Hey Rajesh, How are you da? It’s been a long time
Ye Rajesh, Eppadi da irukka? Romba naal aachu
எ ராஜேஷ், எப்படி டா இருக்க? ரொம்ப நாள் ஆச்சு
Rajesh:
Yes, Mohan. I am quite well. How are you doing?
Aama Mohan. Naan romba nalla iruken. Nee epdi irukka?
ஆமா மோகன். நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?
Mohan:
Superb da. Are you married yet?
Super da. Kalyaanam aaiducha?
சூப்பர் டா. கல்யாணம் ஆயிடுச்சா?
Rajesh:
Yes, dude. I am married, and also I have a kid
Ama machan. Enakku kalyanam aaiduchu, oru kuzhanthai kooda irukku
ஆமா மச்சான். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, ஒரு குழந்தை கூட இருக்கு
Mohan:
Great da. Boy or Girl child?
Great da. Aaana kuzhanthaiya illa ponna?
கிரேட் டா. ஆண் குழந்தையா இல்ல பொண்ணா?
Rajesh:
Girl child dude, then what about you?. Are you single or married?
Pon kuzhanthai machan, apram unna pathi sollu. Single’a illa kalyaanam aaiducha?
பெண் குழந்தை மச்சான், அப்புறம் உன்ன பத்தி சொல்லு. சிங்களா இல்ல கல்யாணம் ஆயிடுச்சா?
Mohan:
I am still single da. But my mother is forcing me to get married
Naan innum single thaan da. Aana enga amma enna kalyanam panna solli force pandranga
நான் இன்னும் சிங்கள் தான் டா. ஆனா எங்க அம்மா என்ன கல்யாணம் பண்ண சொல்லி போர்ஸ் பன்றாங்க
Rajesh:
Good dude. Get married soon. Are you working or doing business?
Nallathu machan. Seekiram kalyanam panniko. Vela pakuriya illa thozhil pandriya?
நல்லது மச்சான். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. வேல பாக்குறிய இல்ல தொழில் பண்றியா?
Mohan:
I am doing business da. Going quite good. You?
Naan Business pandren da. Nalla poittu irukku. Nee?
நான் பிசினஸ் பண்றேன் டா. நல்லா போயிட்டு இருக்கு. நீ?
Rajesh:
I am working at a company dude. But it’s boring. Actually speaking I want to resign the job and start a business
Naan oru company la vela paakuren machan. Aaana romba bore. Sollapona naan resign pannitu business pannalamnu irukken
நான் ஒரு கம்பெனில வேல பாக்குறேன் மச்சான். ஆனா ரொம்ப போர். சொல்லப்போனா நான் ரிசைன் பண்ணிட்டு பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்
Mohan:
No problem da. If you need any help call me da. Here is my mobile number
Onnu pratchanai illa da. Unakku entha help venumnaalum enakku call pannu da. Indha ennoda mobile number.
ஒன்னு பிரச்சனை இல்ல டா. உனக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு டா. இந்தா என்னோட மொபைல் நம்பர்.
Rajesh:
Sure dude. I am giving a missed call, save my number as well
Nichayama machan. Naan oru missed call tharen, ennoda numberayum save panniko
நிச்சயமா மச்சான். நான் ஒரு மிஸ்டு கால் தரேன், என்னோட நம்பரையும் சேவ் பண்ணிக்கோ
Mohan:
Okay, da. I need to go right now. Call me whenever you get time
Sari, da. Naan ippa kelambanum. Unakku neram kedaikum podhu call pannu
சரி, டா. நான் இப்ப கிளம்பனும். உனக்கு நேரம் கிடைக்கும் போது கால் பண்ணு
Rajesh:
See you dude. Bye
Papom machan. Bye
பாப்போம் மச்சான். பை
You can also visit our dedicated Language learning page to learn the Indian languages here: